தேவ வழி நடத்துதலின் இரகசியங்கள்

சத்திய இயேசுவும்; - தேவ வழி நடத்துதலின்; இரகசியங்கள்

( சங் 23:3, யோவா 16:13 )

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். சங் 23:3

சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். யோவா 16:13

சத்திய வேதத்தில் தேவன் தன்னுடைய ஜனங்களை வழிநடத்த பகலிலே மேகஸ்தம்பமும் இரவிலே அக்கினி ஸ்தம்பமுமாகக் காணப்பட்டது. தேவனுடைய வழி உத்தமமானது ஆகவே அவைகளில் நடக்கும்போது ஒருக்காலும் இடறுவதில்லை. சாத்தானின் தவறான வழிநடத்துதலுக்கு நம்மை விலக்கி காக்கும்படி எல்லா விதங்களிலும் வழிநடத்துகின்றார்.

1. கண்கள் மூலம் வழி நடத்துதல்

( சங் 32:8 )

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

சங் 32:8

சத்திய வேதத்தில், தேவனானவர் மனிதனை வழிநடத்தும்படியாக கட்டளையைக் கொடுத்து வழிநடத்தினார். கர்த்தரின் கண்கள் பூமியெங்கும், குறிப்பாக நீதிமான்களின்மேல் நோக்கமாயிருக்கின்றதே. அதற்குக் காரணம் நமது கண்களின் மூலம் தமது சத்தியத்தில் வழிநடத்தவே.

1. என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். ஏசா 66:2

2. உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது: உன் கண்ணிமைகள் உனக்குமுன்னே செவ்வையாய் பார்க்கக்கடவது. நீதி 4:25

3. மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். சங் 119:37

4. இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும், கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும். சங் 80:1

5. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

மத் 5:28

6. அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். சங் 143:8

7. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு, இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

மத் 18:9

சத்திய வேத ஆராய்ச்சியில் சம்மந்தப்பட்ட வசனங்களின் அடிப்படையில் ஆராயும்போது, கர்த்தருடைய கண்கள் உத்தம இருதயமுள்ளோர் மேல் நோக்கமாயிருக்கிறது. அவர்களை உத்தமத்தில் வழிநடத்திட கர்த்தரின் கண்கள் உலாவுகின்றது.

2. காதுகள் மூலம் வழி நடத்துதல்;

( நீதி 20:12 )

கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார். நீதி 20:12

சத்திய வேதத்திலே என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும் என்றும் அந்நியனுடைய சத்தத்தை அறியாதபடியால் அவர்களுக்கு பின் செல்வதில்லை. அப்படியானால் காதுகளினால் தேவசத்தம் கேட்டு வழிநடத்தப்படுதல் மிக அவசியம் தேவனுடைய வழிநடத்துதலைக் காதுகள் கேட்டு அறிய வேண்டும்;.

1. நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். ஏசா30:21

2. உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன், உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

சங் 143:10

3. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார். மாற் 4:9

4. பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி, நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். மாற்கு 7:14

5. என் வாய் ஞானத்தைப் பேசும், என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

சங் 49:3

6. சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

யோவா 16:13

7. என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து. நீதி 23:19

சத்திய வேத ஆராய்ச்சியில், இந்த வசனங்களை வைத்து யோசித்துப் பார்க்கையில் என் மகனே என் வார்த்தைக்குச் செவிகொடு என்றும், கவனமாய்க்; கேட்பாயானால் மேய்ப்பனின் சத்தத்தை அறிந்த ஆடுகளாய் கேட்ட சத்தியமாகிய வார்த்தையின் சத்தத்தில் காதுகளின் வழிநடத்துதலைப்பெறலாம்.

3. கால்கள் மூலம் வழி நடத்துதல்;

( ஏசா : 48:17 )

எ இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஏசா 48:17

சத்திய வேதத்திலே ஒரு சிறு பிள்ளையைக் கைபிடித்து நடத்துவது போல எகிப்திலிருந்து தம் ஜனங்கள் புறப்பட்டுவந்ததில் கால்வீங்கவுமில்லை. வஸ்திரம் பழையதாய் போகவுமில்லை. வழியை செம்மைபடுத்தி தேவன் பத்து கட்டளைகளையும் கொடுத்திருந்தார்.

1. உன் கால் நடையை சீர்தூக்கிப் பார்: உன் வழிகளெல்லாம் நிலைவரப் பட்டிருப்பதாக. நீதி 4:26

2. இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும், கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

சங் 80:1

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். சங் 23:3

4. பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

சங் 40:2

5. மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன். சங் 17:4

6. என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது, அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். சங் 25:15

7. நானோ என் உத்தமத்திலே நடப்பேன், என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும். சங் 26:11

சத்திய வேத ஆராய்ச்சியிலே வசனங்களில் உள்ளவைகளில் தியானிக்கும் போது கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். பாதயைச் செவ்வைபண்ணுங்கள் என்ற வார்த்தையின் படியே நடந்து கர்த்தருக்கு உகந்த கிரியைகளிலே காணப்படவேண்டும்.